தனி சின்னத்தில் தான் போட்டி.., வைகோ அதிரடி

458

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ம.தி.மு.க. அங்கம் வகிக்கிறது. இந்த கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்சியின் பொருளாளர் அ.கணேசமூர்த்தி வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.

ம.தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பறிபோனதால் அக்கட்சியின் ‘பம்பரம்’ சின்னம் கைவிட்டு போனது. எனவே தி.மு.க.வின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ம.தி.மு.க. தனி சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘தி.மு.க. தலைமையிலான கூட்டணி சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, தேர்தல் அதிகாரி ஒதுக்குகின்ற சின்னத்தில் போட்டியிடுவார்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of