மோடி வருவதை தடுக்க தன் உயிரை பணையம் வைக்கும் மதிமுக தொண்டர்…, டிரான்ஸ்ஃபார்மர் மீது போராட்டம்

372

திருப்பூரில் இன்று நடைபெறும் விழாவில், சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். அத்துடன் புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரெயில் நிலையம் அருகே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் மோடிக்கு எதிராக கருப்பு கொடிகளை காட்டியபடி கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல செய்ய போலீசார் முயற்சித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் தொடர்ந்து தங்களது போராட்டத்தினை தொடர்ந்தனர். எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பியபடி இருந்தனர்.

இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் உள்ளே புகுந்து உள்ளார். அவருக்கு எதிராகவும் தங்களது எதிர்ப்பினை போராட்டக்காரர்கள் பதிவு செய்தனர்.

இதனிடையே போராட்டத்திற்கு தொடர்ந்து அனுமதி வழங்க வலியுறுத்தி டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏறி ம.தி.மு.க. தொண்டர் ஒருவர் கோஷமிட்டபடியே போராட்டத்தில் ஈடுபட்டார்.