நானும் அப்பாவும் திரு. ரஜினிகாந்த் படங்களின் ரசிகர்கள்

483

சென்ற வாரம் இலங்கையில் இருந்து வந்த இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் மரியாதை நிமித்தமாக பல அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்தார். அதேபோல அவர் மறுபடியும் இலங்கை புறப்படும் முன்பாக நடிகர் ரஜினிகாந்த் அவர்களையும் சந்தித்தார். இவர்கள் சந்திப்பிற்கு பிறகு ரஜினி இலங்கை செல்ல இருந்ததாகவும், ஆனால் அவருக்கு விசா மறுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் இந்த தகவலை மறுத்துள்ளார் இலங்கையின் தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே மறுத்துள்ளார். இந்த நிகழ்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர்,நானும் எனது தந்தையும் நடிகர் ரஜினியின் ரசிகர்கள் அவர் இலங்கை வருவதில் எங்களுக்கு மிகவும். ஆகையால் அவர் இலங்கை வருவதற்கு எந்த தடையும் இல்லை என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of