ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை – நாடு முழுவதும் மருந்து கடைகள் நாளை ஸ்டிரைக்

1888

ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி தருவதை கண்டித்து, நாடு முழுவதும் மருந்து கடைகள் நாளை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தரம் குறைந்த, போலி மருந்து விற்பனை செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துகள், மருத்துவரின் பரிந்துரை அல்லது மருந்தாளுநரின் மேற்பார்வையில் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது, மருந்துகள் சட்ட விதியாக உள்ளது. ஆனால், ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்யப்படும்போது இந்த விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வாய்ப்பே இல்லை.

ஆன்-லைன் மருந்து விற்பனை மூலம் கிராமப்புற, சிறு மருந்து கடைகள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், இந்த மருந்து கடைகளை நம்பியுள்ள பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்படும்.

இந்நிலையில், மத்திய அரசு தனது முடிவினை கைவிட வலியுறுத்தி, நாடு முழுவதும் மருந்து கடைகள் நாளை மூடப்படுகின்றன. இதன்படி அனைத்து மருந்து கடைகளும் நாளை மூடப்படும். அரசு மருந்தங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள் மற்றும் கிளினிக்குகள் இந்த போராட்டத்தில் பங்கேற்காது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of