“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..!

477

விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் ஆகியோ நடிக்க இருக்கும் திரைப்படம் அக்னி சிறகுகள். இந்த திரைப்படத்தை மூடர் கூடம் திரைப்படத்தை இயக்கிய நவீன் தான் இயக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தில் மீரா மீதுன் நடிக்க இருப்பதாகவும், பின்னர் திரைப்படத்திலிருந்த வெளியேற்றப்பட்டார் என்றும் தகவல் பரவியது. இதனை மீரா மிதுனும் ஒத்துக்கொண்டு, படக்குழுவை சாடினார்.

இந்நிலையில் இதனை கண்ட இயக்குநர் நவீன், அக்னி சிறகுகள் படத்தில் ஷாலினி பாண்டேவுக்கு பதிலாகத்தான் அக்ஷராஹாசன் நடிக்கிறார் என்றும், மீரா மிதுனை நாயகியாக ஒப்பந்தம் செய்யவில்லை. எனக்கு தெரியாமலேயே படத்தில் நடிப்பதாக அவர் சொல்லி வருகிறார் என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த மீரா மீதுன் தொடர்ச்சியாக பொய் சொன்னால் என்னிடம் உள்ள வீடியோ ஆதாரத்தை வெளியிடுவேன் என்றும், உங்களுக்கும் எனக்கும் படம் தொடர்பாக நடந்த உரையாடல் இருக்கிறது. அதை வெளியிட்டால் உங்கள் குடும்ப பெண்களையும் பாதிக்கும். அதை வெளியிடட்டுமா? என்று தெரிவித்தார்.

இதையடுத்து நவீனும், மீரா மீதுனுக்கு பதிலடி கொடுத்தார். இவர்களின் இந்த காரசார விவாதம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.