கல்யாணத்துக்கு ரெடியான மீரா மிதுன்..! – இவர் தான் மாப்பிள்ளையா..?

1146

மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக கூறிய நடிகை மீரா மிதுன் அதற்கான தீர்வையும் கூறியிருக்கிறார்.

2016 மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்ற இவர் அழகிப்போட்டி நடத்துவதாக கூறி பலரயும் ஏமாற்றியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரிடம் இருந்த மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்த பிறகும் அவர் சேரன் மற்றும் சக போட்டியாளர்கள் மீது குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில் தனது பெயர் டேமெஜ் ஆனதை உணர்ந்த மீரா மிதுன், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனை சரிசெய்ய ஒரே வழி திருமணம்தான் என முடிவு எடுத்துள்ள மீரா மிதுன் தனது நீண்ட நாள் நண்பரை விரைவில் கரம்பிடிக்க உள்ளார்.

Advertisement