தெலுங்கு பட ரீமேக்கில் சிம்புவுடன் இணையும் மேகா ஆகாஷ்

601

நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் நடித்த, ஒரு பக்க கதை படத்தில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அதன்பிறகு கவுதம் மேனன் இயக்கிய “எனை நோக்கி பாயும் தோட்டாவில்” தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த இரு படங்களுமே வெளியாவத்ற்கு தாமதமாகி வருகின்றன.

இதற்கிடையே அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து மேகா ஆகாஷ் நடித்துள்ள பூமராங் திரைக்கு வரத்தயாராகி விட்டது. தற்போது ரஜினியின் 165வது படத்தில் நடித்து வரும் நிலையில் மேகா ஆகாஷ் அடுத்தகட்டமாக சிம்புவுடன் இணைகிறார்.

தெலுங்கில் பவன்கல்யாண், சமந்தா நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான அதரிண்டிகி தரடி படம், சுந்தர்.சி இயக்கத்தில் தமிழில் ரீமேக் ஆகிறது இப்படத்தில் பவன் கல்யாண் வேடத்தில் சிம்புவும் சமந்தா வேடத்தில் மேகா ஆகாஷும் நடிக்கின்றனர்.

இதுவரை தமிழில் நடித்த படங்கள் வெளிவராத நிலையில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார் மேகா ஆகாஷ்.