மேகதாது அணை திட்டத்தை திரும்பப் பெறக் கோரி தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்பு அமர்வு

281

மேகதாது அணை திட்டத்தை திரும்பப் பெறக் கோரி தமிழக சட்டப்பேரவை சிறப்பு அமர்வில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு கூடுகிறது.

இதில் மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்தும், மத்திய அரசிடம் நிதியை கேட்டு பெறுவது தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.