மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது

643

மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
vovt
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும், எனவே மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

அதே போல், அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசு நீதிமன்றத்தை அவமதிக்கிறது எனவும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை அவசரமாக விசாரிக்குமாறு தலைமை நீதிபதியிடம் தமிழக அரசு தரப்பில் முறையிடப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், மேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, மேகதாது அணை தொடர்பான கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள்,தமிழக அரசின் மனு மீது மத்திய அரசு, நீர்வள ஆணையம் மற்றும் கர்நாடக அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என ஆணையிட்டனர்.