மேகதாது அணைகட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் -வேல்முருகன்

598

தருமபுரியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உச்சநீதிமன்றம் 4 மாநிலங்களில் காவிரி ஆற்றின் குருக்கே தடுப்பனைகள் எதுவும் கட்டக்கூடாது என உத்தரவிட்டுள்ள நிலையில், ஆணையத்தின் அனுமதியும் மீறி கர்நாடகா தற்போது மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது மன்னிக்க முடியாத குற்றம் என்றும், இதற்கு மத்திய நீர்வள ஆணையத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி வண்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். தொடர் பேசிய வேல் முருகன், கர்நாடக அரசுக்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.