மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளித்ததை கண்டித்து பிரதமர் மோடியின் உருவப்பொம்மையை எரிப்பு

322

காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை கண்டித்து, திருச்சி காவிரி பாலம் பகுதியில், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், திடீரென பிரதமர் மோடியின் உருவப் பொம்மையை எரித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.