மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கு எதிரான வழக்கு அடுத்தவாரம் விசாரனை

231

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கு எதிரான வழக்கு அடுத்தவாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரனைக்கு வருகிறது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்டுவதற்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி அளித்திருக்கிறது.

தமிழக விவசாயிகளை பாதிக்கும் இந்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில் இன்று உச்சநீதி மன்றத்தில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, வரும் வாரத்தில் வழக்கு குறித்து விசாரிக்கபடும் என்று கூறியதாக வழக்கறிஞர் உமாபதி தெரிவித்தார்.