“என்னை கலாய்ச்சி போட்ட மீம்ஸெல்லாம் வேஸ்டா?” – மீம் கிரியேட்டர்களை கலாய்த்த தமிழிசை..!

557

தன்னை கஷ்டப்படுத்த நினைத்த, மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களின் முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் பாஜக தலைவராக இருந்தபொழுது தமிழிசையை கலாய்க்கும் விதமாக பல்வேறு மீம்ஸ்களை போட்டு மீம் கிரியேட்டர்கள் சமூகவலைதளங்களில் பரவ விட்டனர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எவ்வளவு மீம் கலாய்களையும் தன் முன்னேற்றத்திற்கான படிகளாய் நினைத்து முன்னேறி தற்பொழுது ஆளுநராகியுள்ளார்.

பாஜக தமிழக தலைவராக இருந்து தற்பொழுது தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்க உள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை சௌந்தரராஜன், மேதகு என்பதைவிட பாசமிகு என்று அழைப்பதுதான் தனக்கு மகிழ்ச்சி என்றும், மற்றவர்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தனக்கு எப்போதும் உண்டு என தெரிவித்தார்.

எதிர்மறையை நேர்மறையாக செய்தால் வெற்றி நிச்சயம் என்றும், பயணத்தை ரசித்துக் கொண்டே சென்றால் நாம் செல்ல வேண்டிய இலக்கு தானாக வந்துவிடும் என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of