ஒரு நபரின் வயிற்றில்… 8-ஸ்பூன், 2-ஸ்க்ரூ டிரைவர், 2-ப்ரஷ்…. அதிர்ந்த மருத்துவர்கள்

399

இமாசலப்பிரதேசத்தில் நோயாளி ஒருவரின் வயிற்றுக்குள் ஸ்பூன், கத்தி, ஸ்குரூ டிரைவர், டூத் பிரஷ் என அனைத்தும் இருந்துள்ளது.

இமாசலப்பிரதேசத்தின் மாண்டி பகுதியில் வசிக்கும் ஒருவர், அங்குள்ள அரசு மருத்துவமனையில் கடுமையான வயிறு வலி என கூறி அட்மிட் ஆகியுள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் விசாரிக்கையில், அவர் ஏதும் சொல்லவில்லை.

spoon

வலியால் அந்த நபர் தொடர்ந்து துடிக்கவே, மருத்துவர்கள் உடனடியாக அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். ஸ்கேனிங் ரிப்போர்ட்டை கண்ட மருத்துவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஏனென்றால், அந்த நோயாளியின் வயிற்றில் இருந்தது 8 ஸ்பூன், 2 ஸ்குரூ டிரைவர், 2 டூத் பிரஷ், ஒரு கத்தி.

இது குறித்து அந்த நோயாளியிடம் கேட்டதற்கு , அவர் எதுவும் சொல்ல தெரியாமல் திருதிருவென விழித்துள்ளார். இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர் நிகில் கூறுகையில், ‘வயிற்றுக்குள் இந்த பொருட்கள் கண்டதும் எங்கள் மருத்துவக்குழு உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். பொதுவாக மனிதர்கள் ஸ்பூன், கத்தி போன்றவற்றை விழுங்க மாட்டார்கள். நோயாளி, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இப்படி செய்துவிட்டார்’ என கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of