ரயில் மின் இணைப்புத் தூணில் ஏறிய நபர் – ரயில் சேவை பாதிப்பு

426

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மின் இணைப்புத் தூணில் ஏறிய நபரால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இன்று காலை அங்கு மின் கம்பிகளுக்கான இணைப்பு தூணின் மீது ஒருவர் அமர்ந்திருப்பதை பயணிகள் பார்த்து ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதை அடுத்து உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் அந்த நபர் கீழே இறக்கப்பட்டார்.

விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக ரயில்வே போலீசார் கூறியுள்ளனர். அந்த நபர் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து ரயில் போக்குவரத்து சீரானது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of