ஆட்டோவில் கடத்தல்.. மனநலம் பாதித்த பெண்.. 5 நாட்கள் நேர்ந்த கொடுமை.. பகீர் சம்பவம்..

419

திருச்சி மாவட்டம் புத்தூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை அருகில் உனவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உனவகத்தின் வாசலின் முன்பு, மனநலம் பாதித்த பெண் ஒருவர் மயக்க நிலையில் கிடந்துள்ளார்.

இதனைப்பார்த்த உணவகத்தின் ஊழியர், அந்த பெண்ணின் அருகில் சென்று பார்த்ததில், அவரது உடலில் ரத்தக் காயங்கள் இருந்துள்ளது. மேலும், உடையும் கிழிந்துக்காணப்பட்டது.

இவ்வாறு இருக்க, ஓட்டலின் அருகே, ஆட்டோவில் 5 பேர் போதை நிலையில் கிடந்துள்ளனர். அவர்களிடம், இதுகுறித்து ஓட்டல் ஊழியர் விசாரிக்க சென்றுள்ளார். ஆனால், அவர் விசாரிக்க வந்ததும், அந்த 5 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இதையடுத்து, காவல்துறையினருக்கு, தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை நடத்தியதில், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

மேலும், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், 5 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து 5 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.