உட்கார்ந்தே வேலை செய்பவரா நீங்கள்..? இது உங்களுக்கான முக்கிய தகவல்..,!

573

நவீன கலாச்சாரம் என்ற பெயரில் நம் முன்னோர்களின் பழங்கால வாழ்க்கை முறை அழிந்துக்கொண்டே வருகிறது. இதனால் தற்போதைய சந்ததியினர் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

தற்போதைய சந்ததியினர் பெரிதும் மறந்துப்போன பழக்கவழக்கத்தில் ஒன்று எண்ணெய் தேய்த்து குளித்தல். இதுதொடர்பான பயன்கள் குறித்து தற்போது பார்க்கலாம்..,

1. எண்ணெய்யை உடலில் தேய்க்கும் போது ரத்த ஓட்டம் தூண்டப்படுகிறது. இதனால் உடலுக்குள் 10 முதல் 15 சதவீத பிராணவாயு கூடுதலாக செல்கின்றதாக ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.

2. கண், காது, மூக்கு, சருமம் போன்ற புலன் உறுப்புகள் எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் மிகவும் நன்றாக செயல்படும்.

3. உட்கார்ந்தபடியே வேலை செய்பவர்களுக்கு கழுத்து, முதுகு போன்ற பகுதிகளில் தசை பிடிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனால் ரத்த ஓட்டத்தில் தடையும் ஏற்படலாம். எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம், ரத்த ஓட்டத்தில் இருக்கும் தடை நீங்கும்.

4. தசைகளில் தேங்கியுள்ள கழிவு, நிணநீர் மூலம் ரத்த ஓட்டத்தில் கலந்து சுத்தி கரிக்கப்பட்டு கழிவாய் வெளியேற்றப் படுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.

5.சருமத்தில் பலவிதமான அழுக்குகள் படிந்து விடுகின்றன. நீரைக்கொண்டு கழுவுவதன் மூலம் எல்லா விதமான அழுக்குகளும் அகற்றப்படுவதில்லை. எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் இப்படிப்பட்ட அழுக்குகள் அகற்றப்பட்டுவிடும்

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of