தங்க ஷூ – புதிய சாதனை படைத்த மெஸ்சி | Messi | Golden Shoe

282

மெஸ்சி, கால்பந்தாட்ட ரசிகர்களின் நாயகனாக திகழ்பவர். நாடு, மொழி என்ற விஷயங்களை தாண்டி நிற்கும் ஒரு விளையாட்டு வீரரான இவருக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் உண்டு. ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்கில் யார் அதிக எண்ணிக்கையில் கோல் அடிக்கிறார்களோ, அவர்களுக்கு ஆண்டுதோறும் யூரோப்பியன் தங்க ஷூ வழங்கப்படுவது வழக்கம்.

தற்போது 2018-19 சீசனில் லா லிகாவில் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி 34 கோல்கள் அடித்து முதல் இடம் பிடித்துள்ளார். ஆகையால் இம்முறை அவருக்கு தங்க ஷூ வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெஸ்சி 6 முறை தங்க ஷூ விருதை வென்று சாதனைப் படைத்துள்ளார். மேலும், தொடர்ச்சியாக மூன்று முறை வென்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒட்டுமொத்தமாக நான்கு முறை தங்க ஷூவை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.