தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

113

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தென்மேற்குப்பருவ காற்றின் காரணமாகவும், ஒரு சில மாவட்டங்களில் காற்றின் வேக மாறுபாடு மற்றும் வெப்பசலனம் காரணமாக லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சேலம், திருவள்ளுவரில் 4 செ.மீ மழையும் பள்ளிபட்டு, சோழவரம், செம்பரம்பாக்கம், திருவல்லங்காடு, பூந்தமல்லி, அம்பத்தூரில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.