ஒரு பெண்ணுக்காக மட்டும் ரயில் இயக்கிய ‘மெட்ரோ’

2715

ஒருவருக்கு மட்டும் மெட்ரோ ரயில் இயக்கியது, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கன மழை பெய்து வருவதால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி போக்குவரத்திற்கு ஒரு தடையாக இருந்தது.

இந்நிலையில் 14ம் தேதி இரவு 10:00 மணிக்கு கர்ப்பிணி பெண் ஒருவர் விக்டோரியா மெமோரியல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்தார். சில நிமிடம் கழித்து, அந்த கர்ப்பிணி பெண் வயிற்று வலியால் இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர்.

மெட்ரோ ஊழியர்களிடம் இத்தகவலை தெரிவித்தனர். ஆனால் இரவு 10:00 மணியுடன் மெட்ரோ சேவை நிறுத்தியதால். மெட்ரோ ஊழியர்கள் உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று இந்த கர்ப்பிணி பெண்ணுக்காக மட்டும் மெட்ரோ ரயிலை இயக்கி அருகில் இருந்து மருத்துவமனையில் அந்த பெண்ணை அனுமதித்தனர்.

இதனால் மக்கள் மத்தியிலிருந்து மெட்ரோ ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Advertisement