இனி எங்கிருந்து வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்!

249

மெட்ரோ ரயிலில் ஒரு மாதத்திற்கு எந்த நேரத்திலும் எந்த ரெயில் நிலையத்தில் இருந்தும் பயணம் செய்யும் விதமாக மாதாந்திர பயண அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் கட்டணம் ரூ.2500. ஒரு நாள் பயண அட்டை ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில், மெட்ரோ ரெயில் நிர்வாகம், மாதாந்திர பாஸ் அட்டை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி ரூ.2,500 மற்றும் முன்பணம் ரூ.50 செலுத்தி இந்த அட்டை பெற்றுக் கொள்ளலாம்.

இதில் ஒரு மாதத்திற்கு எந்த நேரத்திலும் எந்த ரயில் நிலையத்திலிருந்தும் பயணம் செய்யலாம்.

ஏற்கனவே குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இருந்து மற்றொரு ரயில் நிலையத்திற்கு மாதாந்திர பயண அட்டை, தூரத்திற்கு ஏற்ப கட்டணத்தில் உள்ளது. இதில் 60 முறை மட்டுமே பயணம் செய்ய முடியம் என்பது குறிப்பிடத்தக்கது.