மெட்ரோ ரயில் நிலையம் மேற்கூரையில் பதிக்கப்பட்ட டைல்ஸ் விழுந்து பெண் பயணி படுகாயம்

481

சென்னை ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் பதிக்கப்பட்ட டைல்ஸ் விழுந்து பெண் பயணி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

மெட்ரோ இரயிலில் பயணித்துவிட்டு வெளியே வந்தபோது பயணியின் மீது ரயில் நிலையத்தின் மேற்கூரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் பெண் பயணி ஒருவர் மீது விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த பெண் பயணி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

எழும்பூர் இரயில் நிலையத்தில் சில வாரங்களுக்கு முன் இதே போன்ற நிகழ்வு ஏற்பட்டது.

அவசர கோலத்தில் பணிகள் நடைபெறுவதே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமாக அமைவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of