மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் இல்லை – சர்ச்சை சுவரொட்டியால் பரபரப்பு

339

மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக ஒட்டப்பட்ட அறிவிப்பு சர்ச்சையானதால் சில மணிநேரங்களிலேயே அகற்றப்பட்டது.

சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தின் கழிவறையில் தண்ணீர் இல்லை என்று அறிவித்து, சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து செய்திகள் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, சுவரொட்டி அகற்றப்பட்டு, ஒரு சில குழாய்களில் மட்டும் தண்ணீர் வரும் அளவிற்கு தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக வெளியான தகவல்கள் வதந்தி என மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. ரயில் நிலைய கழிவறைகளிலும் பயணிகளின் பயன்பாட்டுக்கு போதிய அளவில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisement