‘மாதவரத்தை மெட்ரோவரமாக’ மாற்றும் தமிழக பட்ஜெட் 2019-20

178

தமிழக நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 2019-20 ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று காலை தாக்கல் செய்தார். இதில் விவசாயம், கல்வித்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துறை உள்ளிட்டவைகளுக்கும் மற்றும் ஏராளமான திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டது.

இதில் குறிப்பாக விவசாயிகளுக்கும் ரூ.10 ஆயிரம் கோடி அளவிற்கு பயிர் கடன் வழங்கும் திட்டம், கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கும் நிதி ஒதுக்கியதற்கு பலர் ஆதரவை தெரிவித்தனர்.

அந்த வகையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.2,681 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

மேலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் 118.90 கி.மீ. நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள் மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்-கோயம்பேடு பேருந்து நிலையம் வரை 52.01 கி.மீ நீளமுள்ள வழித்தடங்களில் மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாவது கட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ரயில் பாதை 172.81 கி.மீ. ஆக அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.