“நாங்க சொன்னா தான் போகணும்..” மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..!

462

தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக குலசேகரன்பட்டினத்தில் 77 மி.மீ. மழை பதிவானது.

தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள உப்பளங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மறு அறிவிப்பு வரும் வரை தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement