11 மாவட்டங்களுக்கு ஒரு குட் நியூஸ்..! வானிலை மையம் அறிவிப்பு..! லிஸ்டில் உங்க மாவட்டம் இருக்கா..?

671

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில் அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. மேலும் அரபிக்கடல் பகுதியிலும் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே இந்த 11 மாவட்டங்களுக்கு மண்டல வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of