இனி இதுலாம் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடக்காது! உயர்நீதிமன்றக்கிளை அதிரடி!

680

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனியார் மெட்ரிக் குலேஷன் பள்ளிகளில் நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், தனியார் மெட்ரிக் குலேஷன் பள்ளிகளில் நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மட்டுமே நடத்தலாம் என்று உத்தரவிட்டனர்.

மேலும், 11ம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் தீர்ப்பு வழங்கினர்.

மேலும், மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் தான் சிறப்பு பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of