மேட்டூர் அணை திறப்பு!

1063

சேலம் சென்ற முதல்வர் ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஜூன் – 12 ஆம்தேதி தொடர்ந்து 2வது முறையாக இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

அணையை திறந்துவைத்த பின்னர் பேட்டியளித்த முதல்வர், மேட்டூர் அணையின் தண்ணீர் காவிரியின் கடைமடைப்பகுதி வரை செல்லும் வகையில், 65 கோடிரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருவதாக கூறினார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பரப்பையும், குறுவை பாசனப்பரப்பையும் அதிகரிப்பதே தமிழக அரசின் நோக்கம் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத்தாண்டி உணவு உற்பத்தியில் தமிழகம் சாதனை படைக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் தஞ்சையில் விவசாயிகள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

Advertisement