எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா – “நடைபாதைகளை ஆக்கிரமித்து பேனர்கள்”

911

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சட்டவிரோதமாக பேனர்கள் – டிராபிக் ராமசாமி

சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் டிராபிக் ராமசாமி முறையீடு செய்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின், நூற்றாண்டு நிறைவு விழா சென்னை YMCA மைதானத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக சாலையோரத்தில் உள்ள நடைப்பாதைகளை ஆக்கிரமித்து அ.தி.மு.க.வினர், 7 அடி உயரத்திற்கு மேல் பேனர்கள் வைத்துள்ளனர்.

இதனால், பொதுமக்கள் சாலைகளை கடக்க முடியாமல் அவதியடைந்துள்ளனர். பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் வகையில், சாலைகளில் பேனர்கள் வைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், பசுமை வழிச்சாலை தொடங்கி நந்தனம் வரை பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

சட்டத்தை கடைபிடிக்க வேண்டிய அரசே, சட்டத்தை மீறி பேனர்கள் வைத்துள்ளதால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதனிடையே, நீதிமன்ற உத்தரவை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணியிடம் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி முறையீடு செய்துள்ளார்.

Advertisement