கருப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ. 750 கோடி நிதியுதவி – விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டன்

316

கருப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த 100 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கவுள்ளதாக பிரபல வீரர் மைக்கேல் ஜோர்டன் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் காவல் துறையினா் நிகழ்த்திய தாக்குதலில் கருப்பினத்தவரான ஜாா்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்தாா். காவல் துறையினரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து அமெரிக்காவின் மினியாபொலிஸ், லாஸ் ஏஞ்சலீஸ், நியூயாா்க், சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஞாயிற்றுக்கிழமையும் போராட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு பகுதிகளில் போராட்டம் வன்முறையாக மாறியது.

michael jordan

அமெரிக்க நாட்டைச்சேர்ந்த ஓய்வுபெற்ற தொழில்முறைக் கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரரான மைக்கேல் ஜோர்டன், இனச் சமத்துவத்தை நிலைநாட்ட 100 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கவுள்ளார். இதுபற்றி ஜோர்டன் தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நம் நாட்டில் கருப்பின மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஓய்வும்வரை அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தவும் உறுதியளிக்கிறோம். கருப்பின மக்களின் இனச் சமத்துவம், சமூக நீதி, கல்விக்காக மைக்கேல் ஜோர்டன் மற்றும் ஜோர்டன் பிராண்ட் ஆகியவை இணைந்து அடுத்த 10 வருடங்களுக்கு 100 மில்லியன் டாலர் (ரூ. 756 கோடி) நிதியுதவி அளிக்கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of