மைக்ரோசாப்டின் பிங் தேடு பொறி முடக்கம்..!

500

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் (Bing)என்ற தேடுபொறி சீனாவில் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சீன அரசு, சமூக வலைதளங்கள், இணையளதளங்களை கண்காணித்து முடக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கெனவே 70 லட்சம் இணையதளங்களையும், 9 ஆயிரத்து 382 மொபைல் ஆப்களை அந்த அரசு முடக்கியது.

மிகப்பெரிய தேடுபொறியான கூகுள் தேடு பொறியை, கடந்த 2010-ஆம் ஆண்டு சீன அரசு முடக்கியது.

அந்நாட்டு அரசின் யுனிகாம் என்ற தேடுபொறியே அங்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் மிகப்பெரிய அயல்நாட்டு தேடுபொறியாக பயன்படுத்தப்பட்டு வந்த மைக்ரோசாப்டின் பிங் தேடு பொறியை சீனா முடக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of