ராணுவ கூட்டுப்பயிற்சியில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் பங்கேற்பு

184

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) சார்பாக ரஷ்யாவில் பன்னாட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்று வருகிறது.

இந்த பன்னாட்டு ராணுவ கூட்டுப் பயிற்சியில் இந்தியா, ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பங்கேற்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரும் செப்டம்பர் 23ம் தேதி வரை நடைபெறும் பன்னாட்டு ராணுவ பயிற்சியில் தத்தமது நாட்டின் சாகசங்கள் மற்றும் துல்லிய தாக்குதல்களை செய்து காட்டி ராணுவ வீரர்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

ஹெலிகாப்டர் சாகசங்கள், பறந்து பறந்து தாக்குதல் ஊர்ந்து சென்றும், மறைந்திருந்தும் தாக்குதல், குண்டு மற்றும் பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல்கள் என போர் முறைகள் தத்ரூபமாக நடத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தை முறியடிக்கும் முனைப்பில் பல்வேறு நாடுகள் செயல்பட்டு வரும் நிலையில் பன்னாட்டு பயிற்சியில் ஈடுப்பட்டுள்ள ராணுவ வீரர்களின் சாகச வீடியோ காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

திரைப்படத்தை மிஞ்சுமளவுக்கு நடந்த இந்த போர் சாகச வீடியோவை சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்து வருவதால் அது தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of