தனி நபர்களுக்கு பாலாபிஷேகம் போன்ற சம்பவங்கள் நடப்பது ஏற்புடையதல்ல – ஐ.ஏ.எஸ் சகாயம்

312

தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், டெல்லி தமிழகத்திற்கு எதுவும் கொடுக்காது என்றும், பொதுவாக விருதுகள் திட்டமிட்டு கொடுக்கப்படுகின்றன எனவும் தெரிவித்தார். எனவே டெல்லியில் முதல் முறையாக வழங்கப்பட்ட சிறந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற விருதை தயக்கத்துடன் பெற்றேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஐ ஏ.எஸ் அதிகாரி சகாயம், கல்வியறிவு அதிகமுள்ள தமிழ்நாட்டில் தனி நபர்களுக்கு பாலாபிஷேகம் போன்ற சம்பவங்கள் நடப்பது ஏற்புடையதல்ல என்றும், ஏழைகளுக்கு தமிழ் வழிக்கல்வி, பணக்காரர்களுக்கு ஆங்கில வழிக்கல்வி என்ற நிலை இந்த சமுதாயத்திற்கு ஆரோக்கியமானது அல்ல எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of