உயர்ந்தது பால் விலை..! – 1 லிட்டர் எவ்வளவு தெரியுமா..?

374

தனியார் பால் நிறுவனங்கள் இந்தாண்டு தொடக்கத்தில் பால் விலையை உயர்ததப்போவதாக மொத்த பால் விற்பனையாளர்களுக்கு ஓர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதன்படி இன்று தனியார் பால் நிறுவனங்களில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு 3 முறை பால் விலை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்யா, ஹெரிட்டேஜ், டோட்லா போன்ற பால் நிறுவனங்கள் இன்று முதல் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தியுள்ளன. பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் முதல் 6 ரூபாயும்; தயிர் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த திடீர் உயர்வால் ஏழை குடும்பங்கள் பாதிக்கப்படுவதோடு, டீ கடைகள் மற்றும் ஓட்டல்களிலும் விலை உயருமோ என்ற அச்சமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of