சாலைக்கு பாலபிஷேகம் – பெரம்பலூரில் பரபரப்பு!

555

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி சாலையில் பாலை ஊற்றி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

milk

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி தமிழக பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நீண்டகாலமாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் பெரம்பலூரில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி சாலையில் பாலை ஊற்றி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமெனவும், சத்துணவுத் திட்டத்தில் பாலை சேர்க்க வேண்டும் உட்பட 9 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தமிழக பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபேற்றது.

milk

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாத்திரத்தில் வைத்திருந்த பாலை சாலையில் ஊற்றி போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.