வியபாரத்தில் நஷ்டம்… குடும்பமே எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்

408

விருதுநகர் பெரியவள்ளி குளம் பகுதியில் மில் நடத்தி வந்தவர் ஆர்.எஸ்.நகரைச் சேர்ந்த 65 வயதான இன்பமூர்த்தி.

வியாபாரத்தில் உண்டான நஷ்டம் காரணமாக கடனில் மூழ்கியுள்ளார். இதன் காரணமாகத்தான் குடும்பமே சேர்ந்து ஒரு விபரீத முடிவுக்கு துணிந்தது.

தங்களது மில்லிலேயே இன்பமூர்த்தி, அவரது மனைவி திலகவதி, மகன் கண்ணன்(40) மூவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் இன்பமூர்த்தியும் கண்ணனும் இறந்துவிட திலகவதி மட்டும் உயிருக்கு போராடினார்.

காலையில் பணியாளர் வந்து மில்லைத் திறந்தபோதுதான் இந்த சம்பவம் தெரியவந்ததை அடுத்து,போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன் பிறகு திலகவதியை மருத்துவமனைக்கும் உயிரிழந்த தந்தையையும் மகனையும் பிரேத பரிசோதனைக்கும் போலீஸார் அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of