தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின்கட்டணமே வசூலிக்கவேண்டும் – உயர்நீதிமன்றம்

196

கொரோனா ஊரடங்கு முடியும் வரை தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின்கட்டணமே வசூலிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென்னிந்திய ஸ்பின்னிங் மில் அசோசியேஷன் சார்பில்  உயர்நீதிமன்றத்தில் மின்கட்டண நிர்ணயம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஊரடங்கால் மூன்று மாதங்கள் தொழிற்சாலைகளும் பஞ்சாலைகளும் மூடப்பட்ட நிலையில் மின்சார வாரியம் அதிக மின்கட்டணத்தை வசூலிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், குறைந்தபட்ச கட்டணத்தை மட்டும், செலுத்துவதற்கு உத்தரவிடவேண்டும் என கோரப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உயர்அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் ஸ்பின்னிங் மில்கள், தொழிற்சாலைகளில் 20 சதவிகித கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று மின்சாரவாரியத்திற்கு உத்தரவிட்டார்.

கூடுதலாக வசூலித்து இருந்தால், வரும் காலங்களில் உள்ள மின்கட்டணத்தில் கணக்கிட்டு சரிசெய்யப்படவேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

ஊரடங்கு முடியும் வரை 20 சதவிகித கட்டணத்தை மட்டுமே தொழிற்சாலைகளிடம் வசூலிக்கவேண்டும் என்று மின்சார வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement