“மாநிலத்தின் முதலமைச்சர் யாரு தம்பி..” அமைச்சர் எழுப்பிய கேள்வி..! பள்ளி மாணவனின் பதிலால் பேரதிர்ச்சி..!

1544

ஜார்க்கண்ட்டில் கல்வி அமைச்சராக பதவியேற்ற ஜகர்நாத் மாத்தோ, பள்ளிகளுக்கு திடீர் ஆய்வு மேற்கொள்வேன் என்று கூறியிருந்தார். அதன்படி, ராம்கர் மாவட்டத்தில் உள்ள கோயா கிராமத்தில் உள்ள பள்ளியை அமைச்சர் மாத்தோ பார்வையிட்டார்.

அப்போது 7ஆம் வகுப்பறைக்குள் நுழைந்த அமைச்சர், நமது மாநிலத்தின் முதலமைச்சர் யார் என்று ஒரு மாணவனிடம் கேட்டார். அந்த மாணவன் அமித்ஷா என்று பதில் கூறியதும் கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால், மாவட்ட கல்வி கண்காணிப்பாளர் சுஷில் குமார், அரசு பள்ளியின் மோசமான கல்வித்திறன் குறித்து விசாரணை நடத்தி, அறிக்கையை சமர்ப்பிக்க அமைச்சர் உத்தரவிட்டார்.