எந்த சிலையாக இருந்தால் என்ன..? – பெரியார் சிலை உடைப்பு குறித்து ஜெயக்குமார் பேட்டி..!

568

இந்தியாவின் மிகமுக்கிய தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் பெரியார் ஈ.வே.ராமசாமி. சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்ற விஷயங்களுக்காக அரும்பாடப்பட்ட இவரது சிலைகள், அவ்வப்போது சில சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றி அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், எந்த தலைவரின் சிலை அவமதிக்கப்பட்டாலும் அது தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவித்தார். மேலும், பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது போன்ற ஈனச் செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Advertisement