பொன்.மாணிக்கவேல் நேர்மையான அதிகாரி என்று யார் சொன்னது? – சி.வி.சண்முகம்

260

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், பொன்.மாணிக்கவேல் உயர் அதிகாரி என்கிற கோதாவில் சுற்றித் திரிவதாகவும், அவர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். பொன். மாணிக்கவேல் உயர்நீதி மன்ற உத்தரவின் எதிரொலியாக தான் தப்பித்து வருகிறார் என்றும், அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டு உள்ளதாக அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்தார். மேலும் பொன்.மாணிக்கவேல் நேர்மையான அதிகாரி என்று யார் சொன்னது எனவும் கேள்வி எழுப்பினார்.