“ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர் விட்டு போனது!”- அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

845

ஜெயலலிதா இல்லாததால், சில நடிகர்களுக்கு குளிர்விட்டுப் போயிருப்பதாக, சர்கார் திரைப்படம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தமிழ்வளர்த்த இத்தாலிய பேரறிஞரான வீரமாமுனிவர் பிறந்தநாள் அரசு விழாவாக கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, மெரினாவில் வீரமாமுனிவர் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை மரியாதை செலுத்தினர். பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்…

கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயர் கொண்டவர் வீரமாமுனிவர், தமிழகம் வந்த பிறகு, முதலில் தைரியநாதர் எனப் பெயர் சூட்டிக்கொண்டார். பின்னர் வடமொழிக் கலப்பை நீக்கி வீரமாமுனிவர் என பின்னர் பெயரை மாற்றிக் கொண்டார். தமிழ் வளர்ச்சிக்கு அவர் செய்துள்ள தொண்டுகளால், தமிழ் உள்ளளவும் வீரமாமுனிவர் பெயரும் இருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் புகழாரம் சூட்டினார்.

சர்கார் திரைப்படத்தில் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறப்படும் கோமளவல்லி என்ற பெயர் எதிர்மறையாக பயன்படுத்தப்பட்டிருப்பது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “ஜெயலலிதா இல்லாமல் பலருக்கும் குளிர்விட்டுப் போய்விட்டது என்றார் மேலும் சட்டதுறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதுபோல, சர்கார் திரைப்படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் ஜெயக்குமார் கூறினார்.

Advertisement