தேமுதிக-வுக்கு உரிய நேரத்தில் வாய்ப்பு கொடுக்கப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்

627

சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற 45வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியின் நிறைவு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், த.மா.கா தலைவர் ஜி.கே. வாசனுக்கு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது, அ.தி.மு.க ஆட்சி மன்றக்குழுவின் முடிவு என்று தெரிவித்தார். அதிமுக ஒரு ஆலமரம் என குறிப்பிட்ட அமைச்சர் ஜெயக்குமார், தே.மு.தி.க-வுக்கு உரிய நேரத்தில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Advertisement