மீன் சாப்பிட்டால் 100 ஆண்டுகள் நலமுடன் வாழலாம் – அமைச்சர் ஜெயக்குமார்

316

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை என்பது வெறும் வதந்தி என்றும், அதை நம்ப வேண்டாம் என்றும் கூறினார். மதுரையில் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்ட மீன்களில் ரசாயனம் தடவியிருந்தது தெரியவந்ததை அடுத்து, உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தரமான மீன்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மீன் சாப்பிட்டால் 100 ஆண்டுகள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழலாம் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், பூம்புகார் தொகுதி சந்திரப்பாடியில் மீன் இறங்குதளம் அமைக்கும் திட்டம் உள்ளதா என பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், சந்திரபாடியில் தற்போது 126 விசைபடகுகளும் 180 நாட்டு படகுகளும் மீன் பிடி நடைபெறுகிறது என்றும் தற்போது அங்கு மீன் இறங்குதளம் அமைக்கும் திட்டம் இல்லை என்றும் தேவைப்பட்டால் எதிர்காலத்தில் அமைக்க ஆலோசிக்கபடும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of