இதற்கு இவர்கள் சரிபட்டு வரமாட்டார்கள்.., பிரேமலதாவுக்கு பதிலடி கொடுக்கும் அமைச்சர்

566

சென்னை தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது. விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்தார்.

அதன்  பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், 

“சென்னையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா நிருபர்களை ஒருமையில் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.க.வில் 37 எம்.பி.க்கள் பற்றி பிரேமலதா விமர்சனம் செய்ததற்கும் பதில் அளித்தார்.யாராக இருந்தாலும் ஒருமையில் பேசக்கூடாது. பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசியதை பிரேமலதா தவிர்த்திருக்கலாம்.

37 அ.தி.மு.க. எம்.பி.க்களால் பயன் இல்லை என்று பிரேமலதா கூறியதை ஏற்க முடியாது. மேகதாது பிரச்சனையில் அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்கள்தான் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தனர்.

தே.மு.தி.க. மீது நாங்கள் மென்மையான போக்கை கடைபிடிக்கவில்லை. யாரையும் கடுமையாக விமர்சித்தாலும் மறப்போம், மன்னிப்போம் என்பதுதான் எங்கள் கொள்கை” என தெரிவித்தார்.

Advertisement