வேலூர் தேர்தல் வெற்றி கோட்டையாக அமையாது, வெத்து கோட்டையாக தான் இருக்கும் – ஜெயக்குமார்

417

திமுகவுக்கு வேலூர் தேர்தல் வெற்றி கோட்டையாக அமையாது, வெத்து கோட்டையாக தான் இருக்கும் என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வை, அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்கா நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூட பொய்யாக கூறி திமுக வெற்றி பெற்றுவிட்டதாக கூறினார்.

வேலூர் தேர்தலில் ஏ.சி.சண்முகத்தின் வெற்றிக்காக பாடுபடுவோம் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், வேலூர் மக்களவை தொகுதியை கண்டிப்பாக அதிமுக கைப்பற்றும் என்று தெரிவித்தார்.

Advertisement