தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை – கூலாக பதில் சொன்ன ஜெயக்குமார்!

899

கவிஞர் கண்ணதாசனின் 93-வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை. பற்றாக்குறைதான் உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திமுக தண்ணீர் விஷயத்தை பெரிதாக்கி போராட்டம் நடத்துகிறது.

மேலும் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் தர முடியாது என திமுக கூறுவது தவறு. அது மக்களுக்கு செய்யும் துரோகம்’ என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஆனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தண்ணீருக்காக வீதிவீதியாக அலைவதும், போராட்டங்கள் நடத்துவதுமாக இருப்பது நடந்து கொண்டு தான் உள்ளது என்பது பொதுமக்களி கருத்தாக உள்ளது.

Advertisement