பொள்ளாச்சி விவகாரத்தில் அரசு உணர்வுப்பூர்வமாக செயல்பட்டுள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்

163

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது. அதிமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் எந்த சிக்கலும் இல்லை. விரைவில் அதிமுக தலைமை பட்டியலை வெளியிடும்.அதிமுகவில் தொகுதிப்பங்கீடு குறித்த அறிவிப்பு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வரும். எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்துத் தந்தது போல் அதிமுகவின் தேர்தல் அறிக்கை இருக்கும்.

பொள்ளாச்சி கொடூரம் மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.  உச்சபட்ச தண்டனை தரவேண்டும். பொள்ளாச்சி விவகாரத்தை பெரிதாக்கி அரசியலாக்க விரும்புகிறார்கள்.

அரசு தக்க நடவடிக்கை எடுக்கும். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். பொள்ளாச்சி விவகாரத்தில் அரசு உணர்வுப்பூர்வமாக செயல்பட்டுள்ளது. இந்த விவகாரம் தேர்தலில் எதிரொலிக்காது எனஇவ்வாறு அவர் கூறினார்.