நான் ஆடாததே இந்திய அணியின் தோல்விக்கு காரணம்- ஜெயக்குமார்

440

இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 261-வது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தான் விளையாடி இருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது போல், இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

அதிமுகவும், இந்திய அணியும் தோல்வியில் இருந்து மீண்டு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.