“ரஜினிகாந்த் வாய் மூடி மவுனமாக இருக்க வேண்டும்” – அமைச்சர் ஜெயக்குமார்

415

தேவையில்லாத ஒன்றை பேசுவதற்கு பதிலாக, ரஜினிகாந்த் வாய் மூடி மவுனமாக இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை, ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1971-ல் நடைபெறாத ஒரு விஷயத்தை ரஜினி பேசி இருப்பது மலிவான அரசியல் என்று கூறினார்.

துக்ளக் பத்திரிகையில் வந்த செய்திக்கு அவுட்லுக் பத்திரிகை எப்படி ஆதாரமாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், நடக்காத விஷயத்தை கூறி ரஜினி மக்களை திசை திருப்புகிறார் என்றும், தேவையில்லாத ஒன்றை பேசுவதற்கு பதிலாக, ரஜினிகாந்த் வாய் மூடி மவுனமாக இருக்கலாம் எனவும் கூறினார்.

ரஜினியை கண்டு திமுக வேண்டுமானால் பயப்படலாம், எத்தனை ரஜினி வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement