TNPSC தேர்வில் முறைகேடு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் – ஜெயக்குமார்

307

சென்னை வாணியஞ்சாவடியில் மீன் வளர்ப்பு மற்றும் ஆழ்கடல் மீன்பிடி பற்றிய ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையை டெல்டா மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக விவசாயிகள் பாராட்டி வரும் நிலையில், திமுகவிற்கு பாராட்ட மனமில்லை என்று தெரிவித்தார்.

இதனால் திமுக, டெல்டா மக்களின் கோபத்திற்கு ஆளாகி, அதன் தாக்கம் 2021 சட்டமன்ற தேர்தலில் இன்னும் படுபாதாளத்திற்கு செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 50-க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி கைது செய்துள்ளதாகவும், தவறு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்பதற்கு இதைவிட வேறு ஒரு ஆதாரம் தேவையில்லை என்று தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புவதாக கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of